Connect with us

என் தலையில் ஆணுறை மாட்டினார்..! ஜனகராஜிடம் கமல்ஹாசன் செய்த செயல்..!

janagaraj

Cinema History

என் தலையில் ஆணுறை மாட்டினார்..! ஜனகராஜிடம் கமல்ஹாசன் செய்த செயல்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் வந்து காமெடியன் ஆனவர் நடிகர் ஜனகராஜ். கதாநாயகனாக நடிக்க இருந்த ஜனகராஜிற்கு அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது ஒரு பக்க கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் அவரால் கதாநாயகனாக நடிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த பலவீனத்தையே தனது பலமாக மாற்றி வெற்றிக்கரமாக காமெடியனாக தனது சினிமா பயணத்தை துவங்கினார் ஜனகராஜ். ஆரம்பத்தில் சுவரில்லா சித்திரங்கள், புதிய வார்ப்புகள் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு அதிக பிரபலமான ஜனகராஜ் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் மாதிரியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதனை தொடர்ந்து 90 காலக்கட்டங்களில் ஜனகராஜிற்கு பசுமையான காலக்கட்டங்களாக இருந்தது.

பிறகு 2000த்திற்கு பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கின. தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறார் ஜனகராஜ். அவருடைய மகனுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்றெல்லாம் புரளிகள் வந்து கொண்டிருந்தன. அதெல்லாம் பொய் என ஒரு காணொளியில் பேசியிருந்தார் ஜனகராஜ்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் கூறும்போது சத்யா படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசன் என்னை பார்த்தார் திடீரென கையில் ஒரு ஆணுறையுடன் வந்தார்.

அதை எனது தலையில் மாட்டிவிட்டு இந்த படத்தில் நீங்கள் நாயுடுவாக நடிக்கிறீர்கள் என கூறினார். அதற்காக எனது தலையில் ஆணுறையை மாட்டி மொட்டை தலை போல ஆக்கினார். பிறகு அதில் விக் கை மாட்டி என்னை நாயுடு தோற்றத்திற்கு கொண்டு வந்தார். என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஜனகராஜ்.

To Top