Connect with us

நானே போறேன்.! விடுங்க சாமி..! – ஆத்திரத்தில் கத்திய ஜனனி

News

நானே போறேன்.! விடுங்க சாமி..! – ஆத்திரத்தில் கத்திய ஜனனி

Social Media Bar

பிக்பாஸ் ஆறாவது சீசன் துவங்கியது முதலே பெரும் பிரச்சனையில்தான் போய்கொண்டுள்ளது. போட்டியாளராக இருக்கும் அனைவருமே எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் அளிக்கப்படும் போட்டிகள் அனைத்தும் இறுதியில் சண்டையில்தான் போய் முடிகிறது. இந்த வாரமும் இரு குழுக்கலாக பிரித்து இருவருக்கும் இனிப்புகள் செய்யும் போட்டிகள் வழங்கப்பட்டன.

அந்த போட்டிகளும் கூட பெரும் சண்டையில்தான் போய்க்கொண்டுள்ளன. இந்நிலையில் எந்த சண்டையிலும் பெரிதாக சத்தம் போடாமல் அமைதியாக இருந்து வந்தார் ஜனனி.

ஆனால் மீண்டும் மீண்டும் அனைவரும் சச்சரவு செய்து வந்த நிலையில் இன்று மிகவும் கோபமாகிவிட்டார் ஜனனி. எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறீர்கள் என்னை விட்டு விடுங்கள் நான் போறேன் என ஆவேசமாக கத்தி அழ துவங்கிவிட்டார்.

இந்த நிலையில் இன்று வெளியான இந்த ப்ரோமோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ப்ரோமோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Articles

parle g
madampatty rangaraj
To Top