Connect with us

முதல் படத்துலயே இவ்வளவு சம்பளமா? ஜான்வி கபூர் செய்யும் அட்ராசிட்டியை பாருங்க…

News

முதல் படத்துலயே இவ்வளவு சம்பளமா? ஜான்வி கபூர் செய்யும் அட்ராசிட்டியை பாருங்க…

Social Media Bar

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகையாக வளர்ந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் இளைஞர்களை கவரும் வண்ணம் வலம் வந்த ஜான்வி கபூர், தற்போது மிகவும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் “மிஸ்டர் அண்ட் மிசஸ் மாஹி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இவர், தற்போது தெலுங்கில் “தேவரா” என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

தெலுங்கின் முன்னணி இயக்குனராக கொரடலா சிவா இயக்கும் “தேவரா” திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் செயிஃப் அலிகான் வில்லனாக நடித்து வருகிறார். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இத்திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.

இந்த நிலையில் “தேவரா” திரைப்படத்திற்கு ஜான்வி கபூர் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். தென்னிந்தியாவின் டாப் நடிகையாக தற்போது வளர்ந்து நிற்கும் நயன்தாராவே ரூ. 12 கோடி சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

ஆனால் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வந்த முதல் படத்திலேயே ரூ.5 கோடி சம்பளமாக பெறுகிறார் என்பது தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. மேலும் அடுத்ததாக ராம்சரணுடன் ஒரு படத்தில் ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக அவர் ரூ.10 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பாலிவுட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களின் மார்க்கெட் மிகப் பெரிது. ஆதலால் அங்கே சம்பளமும் அதிகமாக இருக்கும். ஆனால் தென்னிந்திய சினிமா சமீப காலமாகத்தான் பாலிவுட்டிற்கு இணையாக வளர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் ஜான்வி கபூர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளமாக பெறவுள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிய வருகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஜான்வி கபூர் உருவாகியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

To Top