Tamil Cinema News
மூன்று குழந்தைகளுக்கு பிறகு அதை செய்ய ஆசை.. ஓப்பனாக கூறிய ஸ்ரீ தேவி மகள்.!
பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஜான்வி கபூர் இருந்து வருகிறார். ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் தமிழ் ஹிந்தி என இரண்டு மொழிகளும் தெரிந்தவராக இருந்து வருகிறார். இவர் வெகு காலங்களாகவே ஹிந்தி சினிமாவில் இருந்து வருகிறார்.
ஸ்ரீ தேவி தமிழில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அப்படியாக பாலிவுட் சென்ற ஸ்ரீ தேவி அங்கு போனி கபூர் என்கிற நபரை திருமணம் செய்துக்கொண்டார். அதனால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் ஸ்ரீ தேவி.
எனவே ஜான்வி கபூரும் அங்கேயே வளர்ந்து வந்தார். இப்படியாக பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மாறினார் ஜான்வி கபூர். சமீபத்தில் அவரது நடிப்பில் தேவரா என்கிற திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. இந்த திரைப்படம்தான் ஜான்வி கபூர் முதன் முதலாக தென்னிந்தியாவில் நடிக்கும் திரைப்படமாகும்.
இந்த நிலையில் ஜான்வி கபூர் திருப்பதி பெருமாள் மீது அதிக பக்தி கொண்டவர். எனவே தனது தாயின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஜான்வி கபூர் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இதுக்குறித்து ஜான்வி கபூர் கூறும்போது நான் திருமணம் செய்துக்கொண்டு திருப்பதியிலேயே குடியேறவேண்டும் என ஆசைப்படுகிறேன். திருப்பதியில் வாழை இலையில் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன். திருப்பதியில் கோவிந்த நாமங்களை கேட்டப்படி என் வாழ்க்கை இருக்க வேண்டும்.
அங்கு சென்று இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டு சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
