News
அஜித் கொடுத்த எச்சரிக்கை!.. சிக்கலில் சிக்கிய ஜேசன் சஞ்சய்!. என்ன நடந்தது!..
தமிழ் சினிமா நடிகர்களில் பெரும் ரசிக பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வசூல் சாதனை படைக்க கூடியதாக இருக்கும். துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி.
மகிழ் திருமேணி இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்களை தயாரிப்பதால் தற்சமயம் லைக்கா நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் விடாமுயற்சி, இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் வேட்டையன் ஆகிய 4 பெரிய படங்களை இயக்கி வருகிறது லைக்கா நிறுவனம். இந்த நிலையில் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்யும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

ஆனால் தற்சமயம் வரிசையாக பெரும் படங்களாக தயாரிப்பதால் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது லைக்கா நிறுவனம். எனவே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை சில காலம் நிறுத்தி வைக்கலாம் என முடிவெடுத்தது.
இதற்கு நடுவே ஜேசன் சஞ்சய் எழுதிய கதை முழுமையாக தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது படத்தை துவங்குவது பற்றி பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருந்தது. இதற்கு நடுவே ஜூன் மாதம் முதல் வேறு படத்திற்கு நடிக்க போய் விடுவேன். அதுவரைதான் கால் ஷூட் கொடுக்க முடியும் என கூறிவிட்டார் அஜித்.

இதனையடுத்து இப்போதைக்கு ஜேசன் சஞ்சய் படத்தி படப்பிடிப்பை துவங்க வேண்டாம். முதலில் விடாமுயற்சியை முடிப்போம் என முடிவெடுத்துள்ளது லைக்கா. எனவே இந்த வருட இறுதியில்தான் ஜேசன் சஞ்சய் திரைப்படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
