தமிழ்நாட்டில் சொதப்பிய ஜவான் –பயங்கர நஷ்டமாம்!..

பொதுவாக வேற்று மொழி படங்களில் தெலுங்கு கர்நாடக திரைப்படங்கள் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெருகின்றன. ஆனால் பாலிவுட் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது கிடையாது.

இந்த நிலையில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தை தமிழில் எப்படியாவது ஓட்டிவிட வேண்டும் என திட்டமிட்டனர் படக்குழுவினர். இதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தினார் அட்லீ.

அப்படியும் கூட இந்த படத்திற்கு அவ்வளவாக தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்கவில்லை. இன்னமும் போட்ட காசை கூட தமிழ்நாட்டில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த படம் தமிழ்நாட்டில் இதுவரை 32 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் நான்கு கோடிக்கு ஓடினால்தான் போட்ட காசே கிடைக்கும் என கூறப்படுகிறது.