ஜெயலலிதா சொன்னதை நம்பி வாழ்க்கையே போச்சு!.. பிரபல நடிகருக்கு நடந்த துரோகம்!.

Jayalalitha: அனைத்து துறைகளிலுமே துரோகம் என்கிற விஷயத்தை  ஏகப்பட்ட முறை சந்தித்திருப்போம். அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் மோகன் சர்மா. இவருக்கு நடிகை ஜெயலலிதா மூலமாக ஒரு துரோகம் நடந்ததாக தனது பேட்டியில் கூறியிருக்கிறார் மோகன் சர்மா.

தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு அதிகமான வரவேற்பு இருந்தது அப்போது நடிகையாக இருந்த நடிகை லட்சுமி மோகன் சர்மாவை காதலித்து வந்தார். பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மோகன் சர்மாவிற்கு திரை துறையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என ஆசை இருந்தது.

இந்த நிலையில் நம்ம கிராமம் என்கிற ஒரு திரைப்படத்தை தமிழில் இயக்கினார் மோகன் சர்மா. அதே திரைப்படத்தை மலையாளத்திலும் திரைப்படம் ஆக்கினார். இந்த திரைப்படத்தின் கதைப்படி குழந்தை திருமணம் செய்யப்பட்டு விதவையான ஒரு பெண் அந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்ற நினைக்கும் ஒரு பாட்டி.

mohan sharma
mohan sharma
Social Media Bar

இதற்கு நடுவே சமுதாயத்தில் விதவைப் பெண்ணிற்கு எதிராக இருக்கக்கூடிய விஷயங்கள் இவற்றை வைத்து எழுதப்பட்ட கதைதான் நம்ம கிராமம். இந்த திரைப்படம் வெளியான பொழுது இதற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து மோகன் சர்மாவிற்கும் வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கியிருந்தன. இந்த நிலையில் இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் கிடைத்தன இந்த நிலையில் படத்தை பற்றி கேள்விப்பட்ட ஜெயலலிதா அந்த படத்தின் பிரிண்ட்டை பார்ப்பதற்காக வேண்டும் என்று மோகன் சர்மாவிடம் கேட்டிருந்தார்.

இதனை அடுத்து மோகன் சர்மாவும் அதை ஒரு பிரிண்ட் எடுத்து ஜெயலலிதாவிற்கு வழங்கியிருக்கிறார். அதனை பார்த்த ஜெயலலிதா இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது. இந்த படத்திற்கான சேட்டிலைட் உரிமத்தை நானே வாங்கிக் கொள்கிறேன். ஜெயா டிவிக்காக இந்த படத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

அப்பொழுது மோகன் சர்மாவும் பணரீதியாக கொஞ்சம் நெருக்கடியில் இருந்ததால் ஒரு கோடி ரூபாய் விலைக்கு அந்த படத்தை ஜெயா டிவிக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு ஜெயா டிவி எந்த ஒரு தொகையும் மோகன் சர்மாவிற்கு வழங்கவில்லை.

அந்த திரைப்படமும் ஜெயா டிவியில் போடப்படவில்லை சொல்லப்போனால் அந்த படத்திற்கான சேட்டிலைட் உரிமம் இப்போது வரை விற்கப்படவில்லை என கூறலாம் நாளடைவில் அந்த திரைப்படம் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டதால் அதற்குப் பிறகு மோகன் சர்மாவால் அந்த திரைப்படத்தை விற்க முடியவில்லை இதனை கவலையுடன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் மோகன் சர்மா.