ஜெயம் ரவியின் அடுத்த படம் என்ன? – வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

தற்சமயம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் திரைப்படம் அவரை வெகுவாக பாப்புலர் ஆக்கிவிட்டது என கூறலாம்.

அந்த அளவிற்கு அந்த படம் அவருக்கு புகழை சேர்த்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு அவர் நடித்த பூமி, கோமாளி திரைப்படங்கள் ஆவரெஜ் ஹிட் கொடுத்த திரைப்படங்களாகவே இருந்தன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும்போதே அதன் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் ஜெயம் ரவி. இந்த நிலையில் இதற்கு பிறகு இயக்குனர் அஹமத் இயக்கத்தில் இறைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இது இல்லாமல் அகிலன் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு தற்சமயம் இறைவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் இந்த படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. அதன் பிறகு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh