News
புது கெட்டப்பில் கார்த்தி! – எதிர்பார்ப்பை தூண்டும் அடுத்த படம்!
வர வர தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் ரசிகர்களிடையே ஹிட் கொடுக்க கூடிய கதைகளை தேடி நடிக்கிறார். ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.
போன வருடம் வெளியான, விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் மூன்று திரைப்படங்களுமே கார்த்திக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்கள். இதனால் இயற்கையாகவே நடிகர் கார்த்தி திரைப்படங்கள் மீது தற்சமயம் ரசிகர்களுக்கு ஆவல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அவர் நடித்த மூன்று திரைப்படங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத வெவ்வேறு வகையான கதைகளாகும். இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் படம் ஜப்பான்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராஜ் முருகன் இருக்குகிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் திரைப்படங்களில் அரசியலில் பேசும் முக்கியமான இயக்குனர்களில் ராஜ் முருகனும் ஒருவர்.
இவர் ஏற்கனவே இயக்கிய குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்கள் வலுவான அரசியலை பேசிய திரைப்படங்களாகும். எனவே இந்த படமும் கண்டிப்பாக ஏதாவது ஒரு அரசியலை பேசும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜப்பான் படத்தின் போஸ்டரை பொறுத்தவரையில் இந்த படத்தில் கார்த்தி ஒரு காமெடி கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
