Connect with us

அந்த படத்தை திரும்ப பார்த்த மாதிரி இருக்கு… எப்படியிருக்கும் ஜெயம் ரவியின் ப்ரதர்.. திரைப்பட விமர்சனம்..!

brother

Movie Reviews

அந்த படத்தை திரும்ப பார்த்த மாதிரி இருக்கு… எப்படியிருக்கும் ஜெயம் ரவியின் ப்ரதர்.. திரைப்பட விமர்சனம்..!

Social Media Bar

வெகுகாலங்களாகவே சீரியஸ் திரைப்படங்களாக நடித்து வந்து கொண்டிருந்த ஜெயம் ரவி தற்சமயம் மீண்டும் காமெடி திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

அப்படியாக அவர் தற்சமயம் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் பிரதர். கோமாளி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியசான திரைப்படங்களாக நடித்து வந்தார் ஜெயம்ரவி. அந்த படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தமிழில் பிரபலக் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனரான ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படம் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவி அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நபராக இருக்கிறார்.

படத்தின் கதை

அவர் எங்கு இருந்தாலும் அங்கு தவறான விஷயங்கள் மட்டுமே நடக்கிறது இதனால் ஜெயம் ரவியின் குடும்பத்தார் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவரை வேறு எங்காவது அனுப்பி விட நினைக்கின்றனர். இந்த நிலையில் அவரது அக்காவான பூமிகா அவரை திருத்துவதற்காக ஊட்டிக்கு அனுப்புகிறார்.

brother

brother

ஊட்டியில் பூமிகாவின் கணவரின் வீட்டிற்கு செல்கிறார் ஜெயம் ரவி. அங்கு ஜெயம் ரவிக்கு அதிகமான விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. அந்த வீடு தொடர்ந்து விதிமுறைகளுக்கு உட்பட்ட வீடாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த குடும்பத்தில் சென்று ஜெயம்ரவி மாட்டிக் கொண்டாரா? அல்லது ஜெயம் ரவியிடம் அந்த குடும்பம் மாட்டிக் கொண்டதா? என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

ஒரே கதை:

இந்த படத்தில் ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும் சில விஷயங்கள் இருக்கின்றன. வழக்கமான ராஜேஷ் திரைப்படங்கள் போலவே இந்த திரைப்படத்திலும் வேலை வெட்டி என்று எதற்கும் சொல்லாத ஒரு கதாநாயகனாக ஜெயம் ரவியின் கதாபாத்திரம் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் இன்னொரு வெர்சனாகதான் பிரதர் திரைப்படம் இருக்கிறது. இண்டர்வல் பிளாக்கிற்க்கு பிறகு அந்த படத்தில் வருவது போலவே இதிலும் ஜெயம் ரவி ஏதாவது சாதித்து காட்ட நினைக்கிறார்.

இந்த திரைப்படத்திலும் கிளைமாக்ஸில் திருமணத்தில்தான் திரைப்படம் முடிவடைகிறது. எனவே படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஒரு வகையில் இந்த திரைப்படம் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. ஆனால் ஜெயம் ரவிக்கு காமெடி கதைகள் ஒர்க் ஆகும் என்பதால் இந்த திரைப்படம் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top