Tamil Cinema News
மனம் வருந்தும்படி பேசிய வி.ஜே சித்து.. கடுப்பாகி ஜெயம் ரவி எடுத்த முடிவு.. காமெடி பண்ணதால் வந்த வினை.!
நடிகர் ஜெயம் ரவி வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவில் தனக்கென தனி இடத்தை இவர் பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் சமீப காலமாகவே ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கை சொந்த வாழ்க்கை இரண்டுமே பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
சமீப காலங்களாகவே அவர் நடித்த இறைவன், அகிலன், சைரன் மாதிரியான எந்த திரைப்படங்களுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே அவரது சொந்த வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இந்த நிலையில் தற்சமயம் கோவாவில் இருந்து வருகிறார் ஜெயம் ரவி.
சமீபத்தில அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படம் வெளியானது. இது தொடர்பான ப்ரோமோஷனில் இருந்து வந்த ஜெயம் ரவி திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் இனி யாரும் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம்.
ரவி மோகன் என அழைத்தால் போதும் என கூறியிருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பின்னணி காரணமாக வி.ஜே சித்து என்கிற யூ ட்யூப்பர் இருந்ததாக கூறப்படுகிறது.
பட ப்ரோமோஷனுக்காக வி.ஜே சித்து யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றிருந்தார் ஜெயம் ரவி. அப்போது அவரிடம் பேசிய வி.ஜே சித்து ஏன் 20 வருடங்கள் ஆன பிறகும் ஜெயம் ரவி என்றே பெயர் வைத்துள்ளீர்கள். அதை மாற்றலாம் அல்லவா என கூறியதோடு அல்லாமல் நகைச்சுவையான சில பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளார்.
இது ஜெயம் ரவியை மனதை பாதித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பேட்டிக்கு பிறகு தனது பெயரை மாற்றி அறிக்கை விட்டுள்ளார் ஜெயம் ரவி.
