அவர் பேச்சை அப்பவே கேட்டிருந்தால் இது நடந்திருக்காது… ஜெயம் ரவிக்கு அப்பவே ரஜினி கொடுத்த அட்வைஸ்..!

சமீபகாலமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரின் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.. முதன்முதலாக வலைப்பேச்சு யூடியூப் சேனல் தான் இந்த விவகாரத்தை துவங்கி வைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு வலைப்பேச்சு யூடியூப் சேனலில் உள்ள பத்திரிகையாளர்கள் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஆகப் போவதாகவும் அவர்களுக்குள் சண்டை இருப்பதாகவும் ஒரு பேச்சை துவங்கி வைத்தனர்.

இதனை அடுத்து எந்த காரணத்தினால் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்கப் போகிறது என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது.

அதற்கு பலவாறான காரணங்களும் கூறப்பட்டு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இன்று ஜெயம் ரவி தனக்கும் தனது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து நடக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Social Media Bar

ரஜினி கொடுத்த அட்வைஸ்:

இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு ஏன் ஜெயம் ரவி இப்படியான ஒரு முடிவை எடுத்தார் என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்தாலும் கூட தன்னுடைய பழைய வாழ்க்கையில் ஜெயம் ரவி தவறவிட்ட ஒரு வாய்ப்பு தான் தற்சமயம் இப்பொழுது அவரது விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அதாவது நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலில் நடிகர் தனுஷை தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திருமணம் செய்து வைக்க யோசிக்கவில்லை. அதற்கு முன்பே அவர் யோசித்த நபர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளாத கெட்ட பெயர் இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தார்.

எனவே அவர் தனது மகளுக்கு இவர் சரியாக இருப்பார் என்பது ரஜினிகாந்தின் எண்ணமாக இருந்தது. அதற்கு ஏற்றார் போலவே ஜெயம் ரவி இப்பொழுது வரை பெரும்பாலும் படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை பார்க்க முடியாது.

ஆனால் ஜெயம்ரவி அப்போதே ஆர்த்தியை காதலித்து வந்த காரணத்தினால் ரஜினிகாந்த் அதற்குப் பிறகு தனுஷிற்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார். ஜெயம்ரவி மட்டும் அப்பொழுது ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து இருந்தால் இவருக்கு இந்த விவாகரத்து நிலை வந்திருக்காது என்று நெட்டிசங்கள் ஒரு பக்கம் பேசி வருகின்றனர். ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது.