தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையேயான விவாகரத்துக்கள் குறித்த விஷயங்கள் தான் பேசப்பட்டு வருகின்றன.
ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவரும் 18 வருடங்களாக கணவன் மனைவியாக நல்லபடியாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் ஆனால் சமீபத்தில் அவர்களின் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளது அதிகமாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏனெனில் தமிழ் சினிமாவை பொருத்தவரை அதில் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. அப்படிப்பட்ட ஜெயம் ரவியை திடீரென்று விவாகரத்து செய்து கொள்கிறேன் என கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
ஜெயம் ரவி வெளியிட்ட உண்மை:
இதனிடையே ஜெயம் ரவிக்கு ஒரு பாடகியுடன் தொடர்பு உள்ளது என பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் மனரீதியான பிரச்சினைகள் காரணமாக தான் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்கிறார் என தெரிந்திருக்கிறது.
ஜெயம் ரவியின் கணக்கு வழக்குகள் எல்லாமே அவரது மாமியார் மற்றும் மனைவியின் கைவசம் தான் இருந்தது என்று கூறப்படுகிறது. ஜெயம் ரவி வெளி நாட்டுக்கு சென்று ஏதாவது செலவு செய்தால் கூட அதற்கான மெசேஜ் அவருடைய மனைவி ஆர்த்திக்குதான் செல்லுமாம்.
உடனே அவர் போன் செய்து என்ன செலவு செய்தீர்கள் என்று கேட்பாராம் இப்படி சுதந்திரமே இல்லாமல் இருந்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவரது மாமியார்தான் தயாரித்து வந்தார் அந்த படங்களில் சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்த பொழுதும் அவை தோல்வி அடைந்து விட்டன என்று கூறி ஜெயம் ரவியின் சம்பளத்தை குறைத்து இருக்கிறார் அவரது மாமியார்.
மேலும் வேலைக்காரர்கள் முன்பே வைத்து தன்னை திட்டுவது போன்ற விஷயங்களை ஆர்த்தியும் அவரது மாமியாரும் தொடர்ந்து செய்திருக்கிறார் அதனால் கோபமடைந்த ஜெயம் ரவி தற்சமயம் விவாகரத்து முடிவை எடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.