News
ஆம்புலன்ஸ் ட்ரைவராக ஜெயம் ரவி- டபுள் ஹீரோயின்களோடு அடுத்த படம்!
தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு துவங்கிய டிக் டிக் டிக், அடங்கமறு, கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இப்படி வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஜெயம் ரவி.
இந்த நிலையில் தற்சமயம் ஆம்புலன்ஸ் டிரைவராக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சைரன் என்ற பெயரிடப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகை ஆன அனுபாமா பரமேஸ்வரியும் நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரி இதற்கு முன்பே கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். இது ஒரு மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை விரைவில் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
