Connect with us

ரெண்டு உதவி இயக்குனர்களால் வந்த வெற்றி.. இதுவரை தெரியாத ரகசியத்தை சொன்ன ஜீவா.!

Tamil Cinema News

ரெண்டு உதவி இயக்குனர்களால் வந்த வெற்றி.. இதுவரை தெரியாத ரகசியத்தை சொன்ன ஜீவா.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு சில காமெடி இயக்குனர்களில் இயக்குனர் ராஜேஷ் மிக முக்கியமானவர்.

அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி வி.எஸ்.ஓ.பி ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரியான பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவையாக இருந்தது.

இயக்குனர் ராஜேஷின் திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் நடிகர் சந்தானத்தின் காமெடிகள் எல்லாம் ராஜேஷ் திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்றவையாக இருக்கும்.

அப்படியாக பிரபலமான படங்களில் சிவா மனசுல சக்தி திரைப்படம் மிக முக்கியமான படம் ஆகும். இந்த திரைப்படம் வெளியாகி பதினாறு வருடங்கள் ஆனதை அடுத்து நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் ஜீவா பேசும் பொழுது இந்த திரைப்படத்தில் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்ததற்கு படத்தின் இரண்டு உதவி இயக்குனர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக ராஜேஷ் திரைப்படங்களில் காமெடிகள் அதிக ஒர்க்கவுட் ஆவதற்கு அவர் திரைப்படங்களில் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் தான் முக்கிய காரணம் என தெரிகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

To Top