Bigg Boss Tamil
ஜெஃப்ரிக்கு வலை வீசிய பெண்கள் அணி… ஆபத்தில் இருக்கும் ஆண்கள் அணி.. இந்த வாரம் பிக்பாஸ் வேற ரகம்!..
பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கிய இரண்டு வாரங்களில் நல்ல வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக இல்லை.
ஆனால் கடந்த வாரம் நன்றாக சென்றதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல சனி ஞாயிறு கிழமைகளில் விஜய் சேதுபதி பேசிய விதமும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான போட்டிகள் மற்றும் நாமினேஷன் குறித்த விவரங்கள் எல்லாம் இனிமேல்தான் தெரிய வரும். வாரா வாரம் ஆண்கள் மற்றும் பெண் அணியில் இருந்து ஒரு நபர் இன்னொரு அணிக்கு செல்வது வழக்கமாகும்.
ஜெஃப்ரி அணி மாற்றம்:
அந்த வகையில் இந்த வாரம் யார் ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் அணிக்கு செல்ல போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது தற்சமயம் ஜெஃப்ரி தான் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு செல்ல போகிறார்.
அதே போல பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கு வர இருக்கிறார். ஜெஃப்ரியை பொறுத்தவரை ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இரண்டிலுமே நல்ல நம்பிக்கை கொண்ட போட்டியாளராக இருந்து வருகிறார். இதனால் பெண்கள் அணிக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக ஒரு வேளை அவர் விளையாட துவங்கி விட்டார் அது ஆண்கள் அணிக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த வாரத்தில் என்ன நடக்கும் என தெரியும்.
