News
என்னது அவங்க கூட பாடணுமா!.. ஆளை விடுடா சாமி!.. விஜய்க்கே பயம் காட்டிய பாடல்!..
Thalapathy vijay : திரைத்துறையைப் பொறுத்தவரை திரைத்துறைக்கு நடிக்க வரும் பலரும் நடிப்பை தாண்டி சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு. தெரிந்தோ தெரியாமலோ அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் திரைத்துறைக்கு நடிக்க வந்த பிறகு நடிப்பை தாண்டி படங்களுக்கு பாடல்கள் பாடுவது, திரைக்கதை எழுதுவது, படங்களை இயக்குவது என பல விஷயங்களை செய்தார். அதனை தொடர்ந்து திரைக்கு வந்த பலரும் பாடல்கள் பாடுவது பாடல் வரிகள் எழுதுவது என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கு சினிமாவில் வந்த காலம் முதலே பாடல்கள் பாடுவது மற்றும் இசை ஆகியவை மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. இதனை தொடர்ந்து முதன்முதலாக விஷ்ணு என்கிற திரைப்படத்தில் அவர் பாடிய பாடல் பிறகு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து பல படங்களில் அவர் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜில்லா படத்திற்கு இமான் இசையமைக்கும் பொழுது அதில் ஒரு பாடல் விஜய் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். எனவே கண்டாங்கி கண்டாங்கி என்கிற பாடலை விஜய் பாட வேண்டும் என்று நினைத்தார்.
அந்த பாடலில் பெண் குரலை இந்தியாவின் பிரபல பாடகியான ஸ்ரேயா கோசலை பாட வைத்திருந்தார் டி இமான். அந்தப் பாடலை விஜய்யிடம் போட்டு காட்டி அதற்கு ஆண் குரல் விஜய்தான் பாட வேண்டும் என்று கூறிய பொழுது விஜய் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
இவ்வளவு பிரபலமான ஒரு பாடகியின் பாடலுக்கு ஆண் குரலை நான் பாடுவதா? என்று கூறிய விஜய் கண்டிப்பாக என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். இருந்தாலும் அவர் பாடியே ஆகவேண்டும் என்று இமான் கூறியதால் வேறு வழியின்றி விஜய் பாடினார்.
இருந்தாலும் கூட கடைசி வரை விஜய் கூறியது என்னவென்றால் ஸ்ரேயா கோசலுக்கு சமமாக என்னுடைய குரல் இருக்காது. எனவே அந்த பாடலை வைக்க வேண்டாம் என்று தான் கூறியிருக்கிறார் .ஆனால் அந்த பாடல் அப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றது.
