Connect with us

நாகார்ஜூனாவிடம் கண் கலங்கி நின்ற சமந்தா… சீக்ரெட்டை உடைத்த பத்திரிக்கையாளர்!.

samantha naga chaitanya

News

நாகார்ஜூனாவிடம் கண் கலங்கி நின்ற சமந்தா… சீக்ரெட்டை உடைத்த பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் காலடி பதித்திருக்கும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமந்தாவை குறித்த பேச்சுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சேகுவேரா சமந்தாவை பற்றி கூறியிருக்கும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நுழைவதற்கு அதிக கஷ்டப்பட்ட நடிகை சமந்தா அதன்பிறகு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை 8 ஆண்டுகள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில் சமந்தா தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு மயோசிடிஸ் நோய் பாதிக்கப்பட்டதால் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமந்தா தற்போது பல படங்களில் நடித்து வரும் வேளையில் அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து எந்த ஒரு பதிவும் பதிவிடாமல் சமந்தா தன்னுடைய வேலை கவனித்து வரும் வேளையில், அவருடைய ரசிகர்கள் பலரும் நாக சைதன்யா மற்றும் சோபிதா துளிபாலாவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பிரபல பத்திரிக்கையாளரின் கருத்து

தற்போது தெலுங்கு சினிமாவில் சமந்தாவை பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு கொண்டிருக்கிறது. சமந்தா தெலுங்கு நடிகர் ஒருவரிடம் 25 கோடி ரூபாய் கடன் கேட்டதாக சொல்வதெல்லாம் பொய் என அவர் தெரிவித்திருக்கிறார். நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு சமந்தாவிற்கு நாகார்ஜுனாவின் குடும்பம் ரூபாய் 200 கோடி கொடுப்பதற்கு தயாராக இருந்தது.

ஆனால் இந்த பணம் எல்லாம் எனக்கு வேண்டாம் என சமந்தா கண்ணீருடன் நாகார்ஜுனாவிடம் தெரிவித்து வந்து விட்டார் என்று பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top