Connect with us

விஜய் கட்சியை களைச்சி விடுறதுக்காகதான் அந்த வீடியோவை வெளியிட்டுருக்காங்க!.. விளக்கம் கொடுத்த பத்திரிக்கையாளர்!..

vijay bussy anand

News

விஜய் கட்சியை களைச்சி விடுறதுக்காகதான் அந்த வீடியோவை வெளியிட்டுருக்காங்க!.. விளக்கம் கொடுத்த பத்திரிக்கையாளர்!..

Social Media Bar

வெகுநாட்களாக கட்சி துவங்க போவதாக கூறி வந்த விஜய் தற்சமயம் துவங்கியிருக்கும் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். கட்சி துவங்கிய பிறகு 2026 தேர்தலுக்கு முன்பு படங்களில் நடிப்பதாகவும் அதன் பிறகு படங்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியிருக்கிறார் விஜய்.

இதனையடுத்து கட்சி துவங்கிய உடனே விஜய்யின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது என்றே கூற வேண்டும். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க துவங்கியுள்ளார் விஜய். இதற்கு முன்பு நடிகராக இருந்தவரை மிகவும் அமைதியாக இருந்து வந்த விஜய் தற்சமயம் தீயாய் அரசியலில் இறங்கியுள்ளார்.

thalapathy-vijay-1
thalapathy-vijay-1

விஜய் மக்கள் இயக்கம் துவங்கிய காலக்கட்டம் முதலே அவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த். தற்சமயம் கட்சி தொடர்பான பொறுப்புகளையும் கூட அவர்தான் பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தன.

புஸ்ஸி ஆனந்த் முக்கியமானவர்:

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான அந்தணன் அதற்கு பதிலளித்திருந்தார். புஸ்ஸி ஆனந்த் கட்சியில் இருந்து விலக்கப்பட்டதாக தந்தி டிவியின் லோகோவை போட்டு ஒரு பொய்யான வீடியோவை பரப்பி வருகின்றனர்.

இது விஜய்யின் கட்சியை காலி செய்வதற்காக யாரோ செய்துள்ள வேலைதான். ஏனெனில் அரசியல் களத்தில் விஜய் தாக்குப்பிடிப்பதற்கு முக்கிய காரணமே புஸ்ஸி ஆனந்த்தான். பத்திரிக்கையாளர்கள் விஜய்யை குறித்து ஏதாவது தவறான கருத்தை போட்டுவிட்டோம் என்றால் மறுநாள் எங்கள் வீட்டு வாசலில் நிற்பார் புஸ்ஸி ஆனந்த்.

என்ன சார் தளபதியை வைத்து இப்படி எழுதிவிட்டீர்களே என கேட்பார். அப்படிப்பட்ட ஒரு நபர் இல்லாமல் விஜய் எப்படி அரசியலை நடத்த முடியும். ஒருவேளை எதிர்காலத்தில் புஸ்ஸி ஆனந்த் கட்சியில் இருந்து விலக்கப்படலாம் ஆனால் இப்போது அவர் விலக்கப்படவில்லை என்கிறார் அந்தணன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top