Connect with us

சமந்தாவின் பாவம் சும்மா விடாது.. பிள்ளை பிறக்காதுன்னு ஒதுக்கீட்டாங்க.. நாக அர்ஜூனா குறித்து பேசிய பத்திரிக்கையாளர்!.

samantha naga chaitanya

News

சமந்தாவின் பாவம் சும்மா விடாது.. பிள்ளை பிறக்காதுன்னு ஒதுக்கீட்டாங்க.. நாக அர்ஜூனா குறித்து பேசிய பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நாகசைதன்யா மற்றும் அவரது வருங்கால மனைவி சோபிதா துலிபாலா. இவர்களது நிச்சயதார்தம் பற்றி தற்பொழுது தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட் வரையும் பேசுபொருளாகி உள்ளது.

இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்

நாக சைதன்யா நடிகை சமந்தா இருவரும் 8ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு இரு விட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். நாங்கள் இருவரும் மனம் ஒத்து தான் பிரிகிறோம் அதனால் யாரும் விமர்சிக்க வேண்டாம் என சமந்தா பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

naga chaithanya

விவாகரத்தின்போது நடிகை சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்ட தொகையும் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு வந்துவிட்டார்.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தத்தின் புகைப்படம் நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இவர்களது திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா நிச்சயதார்த்தம் குறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா கருத்து

இது குறித்து பத்திரிக்கையாளர் பேசும்பொழுது நடிகை சமந்தாவை பழி வாங்குவதற்காக தான் நாக சைதன்யா சமந்தா காதலை கூறிய அதே தினத்தில் நிச்சயதார்த்தத்தை நடத்தி இருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு இருந்த உடல் நல கோளாறு காரணமாக அவரை நாக சைதன்யா விவாகரத்து செய்திருப்பார் என பத்திரிக்கையாளர் கூறினார். ஏனென்றால் சமந்தாவிற்கு சிறிது காலத்திற்கு முன்பாக மயோசிடிஸ் என்னும் நோய் ஏற்பட்டது. இதற்காக அவர் தீவிரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொண்டார்.

samantha

சிகிச்சையில் குணமடைந்த சமந்தா தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் இந் நோயினால் பாதிக்கப்பட்டால் சமந்தாவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. உண்மையாக நாக சைதன்யா சமந்தாவை காதலித்து இருந்தால் இது எல்லாம் ஒரு குறையாக அவர் பார்த்திருக்க மாட்டார். ஆனால் சமந்தா நாக சைதன்யாவை உண்மையாக காதலித்து உள்ளதாகவும், தன்னுடைய மகனுக்கு விவகரத்து கொடுப்பதற்காக நாகர்ஜுனா சமந்தாவிற்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்கும் பொழுது கூட சமந்தா வேண்டாம் என கூறிவிட்டார். இவ்வாறாக பத்திரிக்கையாளர் சேகுவேரா நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் குறித்து பேசி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

To Top