சும்மா இருக்குறவனை சொறிஞ்சு விட்டுருவாரு சத்யராஜ் ஆர்யா, விஜய்லாம் பாதிக்கப்பட்டுருக்காங்க!.. லிஸ்ட் போட்டு குற்றம் சாட்டிய பிரபலம்!.
ஒரே வருடத்தில் நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்த திரைப்பிரபலங்களில் சத்யராஜும் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதைய காலக்கட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக்க இருக்கின்றனர். அதனை பேன் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியிட திட்ட்மிட்டுள்ளனர். இந்த நிலையில் இதில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க போகிறார் என்கிற தகவல் இரு தினங்களாக வலம் வந்து கொண்டுள்ளன.
திராவிட சிந்தனை, பகுத்தறிவு என பேசும் சத்யராஜ் அந்த திரைப்படத்தில் எப்படி நடிப்பார் என்பதே இதுக்குறித்து பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இதுக்குறித்து ஒரு காணொளியில் பேசிய வலைப்பேச்சு அந்தணன் சில தகவல்களை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது சும்மா இருக்கும் ஆட்களை கூட சொறிஞ்சு விட கூடியவர் சத்யராஜ். இப்படிதான் ராஜா ராணி திரைப்படம் வெளியானப்போது ஆர்யாவையும் நயன் தாராவும் பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி மாதிரியே இருக்கிறார்கள் என கூறினார். அவர் கூறிவிட்டு அமைதியாக சென்றுவிட்டார்.

ஆனால் அதற்கு பிறகு ஆர்யாவும், நயன்தாராவும் நிஜமாகவே அவர்களை எம்.ஜி.ஆர், சரோஜா தேவி லெவலுக்கு நினைத்துக்கொண்டு அவர்களது சம்பளத்தை அதிகமாக்கினர். அதே போல ஒருமுறை ஒரு விழாவில் விஜய் குறித்து பேசும்போது விஜய் உங்களை நேசிக்கும் இத்தனை கோடி ரசிகர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என வெகு நேரம் அதுக்குறித்து பேசினார்.
விஜய் கட்சி துவங்க வேண்டும் என்பதைதான் மறைமுகமாக கூறினார் சத்யராஜ். அதற்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பலமுறை கூறினாலும் சத்யராஜ் மாதிரியான சீனியர் நடிகர்கள் கூறும்போது அது விஜய்க்கு சிந்திக்க வைக்கும் விஷயமாக மாறியது. விஜய்யும் கட்சியை துவங்கினார்.
எனவே சத்யராஜின் அரசியல் புரியாமல் பலரும் அவர் மோடி படத்தில் நடிக்க மாட்டார் என கூறி வருகின்றனர். ஆனால் கண்டிப்பாக் அவர் அதில் நடிப்பார் என்கிறார் பத்திரிக்கையாளர் அந்தணன்.
Source: Link