Bigg Boss Tamil
படிப்பை பத்தி பத்து முழம் பேசுன பொண்ணு செய்யுற வேலைய பாருங்க!.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஜேபவிகா என்னும் ஜோவிகா!.
Jovikha Vijayakumar Bigg boss tamil : பிக்பாஸ் வீட்டிற்க்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாக இருந்து வந்தார் ஜோவிகா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜோவிகா பலரிடமும் பிரச்சனை செய்ய துவங்கினார். இரண்டாவது வாரமே ஜோவிகாவால் பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் ரகளை நடந்தது.
பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்பின் மீது ஆர்வம் காட்டியதாக ஜோவிகா கூறினார். மேலும் படிப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என கூறினார் ஜோவிகா. அதை வன்மையாக எதிர்த்தார் அங்கிருந்த விச்சித்திரா, படிப்பு முக்கியம் என அவர் பேசினார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த வாரத்தோடு அந்த பிரச்சனை முடிந்தது. ஆனால் உண்மையில் ஜோவிகாவிற்கு தமிழில் எழுத படிக்கவே தெரியாது என்கிற விஷயம் அதற்கு பிறகுதான் தமிழ் மக்களுக்கு தெரிந்தது. ஆமாம் ஒருமுறை பிக்பாஸ் டாஸ்க் விவரங்களை படிக்க சொன்ன போது எனக்கு தமிழில் படிக்க தெரியாது பிக்பாஸ் என்று கூறியுள்ளார் ஜோவிகா.
இந்த நிலையில் நேற்று இரவு ஜோவிகா தமிழில் இப்போதுதான் தனது பெயரை எழுதுவதற்கு முயற்சி செய்கிறார். அதில் தனது பெயரை ஜேபவிகா என எழுதிய ஜோவிகா, பிறகு அதை திருத்தி எழுதினார். அதே போலவே விஜயக்குமார் என்னும் பெயரை விஜய்குமர் என எழுதியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
