Connect with us

தலைவழி கொடுமையா மாறிடுச்சு.. தேவரா படம் எப்படி இருக்கு..! முழு விமர்சனம் இதோ..!

devara 2

Movie Reviews

தலைவழி கொடுமையா மாறிடுச்சு.. தேவரா படம் எப்படி இருக்கு..! முழு விமர்சனம் இதோ..!

Social Media Bar

பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் படமாக தேவரா இருந்து வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்கும் காரணத்தினால் அவரது படங்களுக்கு இங்கும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது என்று கூறலாம்.

தேவரா திரைப்படத்தை பொறுத்தவரை கடல் கொள்ளையர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி பார்த்தோம் என்றால் மன்னர்கள் காலகட்டத்தில் கொள்ளை கூட்டம் என்று ஒன்று மன்னர்களாலே நடத்தப்பட்டது.

தேவரா படம்:

அந்த கொள்ளை கூட்டத்தின் வேலையே அரசருக்கு அணுகூலமான கொள்ளைகளை நடத்துவதாகும். உதாரணத்திற்கு தங்களது எல்லையை தாண்டிய பகுதியில் உள்ள இடங்களில் சென்று கொள்ளையடித்து வருவதற்கு ஒரு கூட்டத்தை வைத்திருப்பார்கள்.

devara 2

devara 2

அதேபோல கடலில் கொள்ளை அடிப்பதற்கு ஒரு கூட்டத்தை ஒரு அரசர் வைத்திருக்கிறார். அதுதான் ஜூனியர் என்.டி.ஆர் இன் அந்த கொள்ளை கடத்தல் கூட்டம். செங்கடலில் இருக்கும் மூன்று தீவுகளில் உள்ள மக்கள் பயமறியாதவர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது பயப்படுபவர்களாக மாறி இருக்கின்றனர் அதற்கு காரணம் தேவரா என்று தேவராவிற்கான இண்ட்ரோவை கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மன்னருக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்து வந்த தேவரா. பிறகு அதனாலயே பாதிக்கப்படுகிறார்.

படத்தில் பிழைகள்

அதனை தொடர்ந்து இனி ஒருவன் நமது தீவில் கொள்ளை கடத்தல் செய்யக்கூடாது என்று முடிவெடுக்கிறார் தேவரா. அதனை தொடர்ந்து கதை எப்படி செல்கிறது. அதற்கு எதிராக மாறுபவர்கள் யார் என்றெல்லாம் கதை செல்கிறது.

தேவரா திரைப்படத்தில் கிராபிக்ஸ் ஒர்க் மற்றும் படத்தில் காட்டப்படும் சண்டை காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் கூட கதையாக செல்லும் பொழுது மிகவும் பொறுமையாக கதை செல்கிறது. மேலும் கதை அமைப்பிலும் சிக்கல்கள் இருக்கின்றன. மேலும் இன்னும் சிறப்பாக இந்த படத்தை செய்திருக்கலாம் என்பது பார்வையாளர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

To Top