Connect with us

சும்மா இல்லாம வாயை விட்டு சிக்கிய ஜோதிகா.. நயன்தாரா காப்பாத்திவிட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல..!

Tamil Cinema News

சும்மா இல்லாம வாயை விட்டு சிக்கிய ஜோதிகா.. நயன்தாரா காப்பாத்திவிட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல..!

Social Media Bar

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன என்றுதான் கூற வேண்டும்.

ஒரு பக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில் இவ்வளவு வன்மத்தை கொட்டும் அளவிற்கு அந்த படம் மோசமாக இல்லை என்று கூறி வருகின்றனர். மேலும் இதுவரை சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படங்களில் மற்ற திரைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது கங்குவா திரைப்படம் பரவாயில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

கங்குவா திரைப்படம்

மேலும் தொழில்நுட்ப ரீதியாக இந்த படத்தில் எந்த குறையும் இல்லை என்று கூறப்படுகிறது. கிராபிக்ஸ் மாதிரியான தொழில்நுட்பங்கள் படத்தில் நன்றாகவே கையாளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தில் எது எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று கருதப்பட்டதோ அதை எல்லாம் சரி செய்யப்பட்டு வருகிறது.

kanguva

kanguva

இந்த நிலையில் அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா படத்தில் சில தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு ஒலி விஷயத்திலும் ஒலியை குறைத்து படத்தை மாற்றி அமைக்கப் போவதாக கூறப்படுகிறது இதற்கு நடுவே கங்குவா திரைப்பட பிரச்சனைக்கு பிறகு அதை திசை மாற்றும் வகையில் நயன்தாராவின் பிரச்சனை நேற்றிலிருந்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.

இவங்க விடமாட்டாங்க போல

நயன்தாரா நடிகர் தனுஷை மிக மோசமாக விமர்சித்து வெளியிட்ட அறிக்கை ஒன்று மிகப் பிரபலமாகி வந்தது. இந்த நிலையில் பலரும் கங்குவா திரைப்படத்தை மறந்து இருந்தனர். ஆனால் மீண்டும் அதை கிளப்பி விடும் வகையில் ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் ஜோதிகா கூறும் பொழுது உண்மையிலேயே படத்தில் ஒரு அரை மணி நேரம் அவ்வளவு வேகமாக செல்லவில்லை. மற்றபடி படம் நன்றாகதான் இருக்கிறது தமிழ் சினிமாவில் பெண்கள் குறித்து தவறான கருத்து இரட்டை அர்த்த படங்கள் எல்லாம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெரும்பொழுது கங்குவா திரைப்படத்திற்கு இவ்வளவு மோசமான விமர்சனங்கள் வந்திருக்க தேவையில்லை என்பதாக கூறியிருந்தார் ஜோதிகா.

இந்த நிலையில் ஜோதிகாவையும் சேர்த்து விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர் நெட்டிசன்கள். அவரது கணவரின் படத்தை நன்றாக இருக்கு என்று கூறுவதற்காக தமிழில் வந்த எல்லா படத்தையும் அவர் மோசமாக பேசலாமா என்று பேசி வருகின்றனர். இது குறித்து இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் கூறும் பொழுது நயன்தாராவே சூர்யாவை காப்பாற்றி விட்டாலும் கூட ஜோதிகா காப்பாற்ற மாட்டார் போல் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

To Top