Tamil Cinema News
உன் கணவரை விட விஜய்தான் பெரிய ஆள்.. பேசிய ரசிகருக்கு செருப்படி கமெண்ட் கொடுத்த ஜோதிகா.!
ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய் அஜித்துக்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. விஜய், அஜித், சூர்யா மூவருமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டங்களில் தான் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது மூன்று நடிகர்களின் திரைப்படங்களுக்குமே அதிக போட்டி என்பது இருந்தது. அஜித் நீ வருவாய் என காதல் மன்னன் மாதிரியான காதல் திரைப்படங்களை நடித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் விஜய் காதலுக்கு மரியாதை பூவே உனக்காக மாதிரியான படங்களில் நடித்து கொண்டிருந்தார்.
அதே சமயத்தில் சூர்யாவும் உன்னை நினைத்து மாதிரியான காதல் திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். இப்படியாக போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட ஆக்ஷன் பிளாக் நடிகர்களாக மாறிய பிறகு விஜய் அஜித்துக்கு இருக்கும் அதே மார்க்கெட் சூர்யாவிற்கு அமையவில்லை.
இப்பொழுதும் சூர்யாவால் அந்த மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.
அதில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் உங்கள் கணவரை விட விஜய் தான் பெரிய ஆள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த ஜோதிகா வயிறு வலிக்க சிரிக்கும்எமோஜியை பதிலாக அளித்து இருந்தார். இது அந்த ரசிகரின் விமர்சனத்தை நக்கல் செய்யும் வகையில் இருந்தது சூர்யா தான் பெரிய நடிகர் என்று இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
