Tamil Cinema News
ரஜினி செய்ததை விஜய் அஜித்தால் செய்ய முடியுமா?.. ஜோதிகா ஓப்பன் சேலஞ்ச்.!
திருமணத்திற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஜோதிகா. மற்ற நடிகைகளை போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் எல்லாம் அவர் சினிமாவை விட்டு விலகவில்லை.
திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த காரணத்தினால்தான் அவர் சினிமாவில் இருந்து விலகினார். ஆனால் இப்பொழுதும் கூட ஜோதிகாவிற்கு என்று ஒரு தனி மார்க்கெட் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வப்போது அவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்சமயம் பாலிவுட் சினிமாவின் மீது ஜோதிகாவிற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
இந்த நிலையில் அவர் முன்பு ஒரு பேட்டியில் பேசிய விஷயம் இப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறது. சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் சந்திரமுகி என்கிற கதாபாத்திரத்திலேயே ஜோதிகாதான் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவர்கள் பேட்டியில் கூறும் பொழுது ரஜினி மாதிரியான ஒரு பெரிய நடிகர் என்னை முக்கிய கதாபாத்திரமாக இருந்த திரைப்படத்தில் நடித்து கொடுத்தார்.
இதே மாதிரி விஜய் அல்லது அஜித் ஒரு பெண் கதாபாத்திரத்தின் பெயரை பட டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களில் நடிக்க முடியுமா? அவர்களும் இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று ஜோதிகா கூறியிருந்தால் அந்த பேட்டிதான் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
