Tamil Cinema News
அஜித் நினைச்சா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!
தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்தவரை அது ஆரம்பித்தப்போது இப்படியான உயரத்தை தொடும் என்பது பலரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஏனெனில் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு மிக அரிதாகதான் எப்போதாவது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் எழுப்பி வந்தார்.
எனவே அரசியல் கட்சி துவங்கினால் கண்டிப்பாக அவ்வளவாக எல்லாம் அரசியல் பேச்சு பேச மாட்டார் என நினைத்தனர். ஆனால் த.வெ.கவின் முதல் கட்சி மாநாடு நடந்தப்போது எல்லாமே மாறி போனது. மிக வெளிப்படையாக ஒன்றிய அரசையும் மாநில அரசையும் சாடி பேசியிருந்தார் நடிகர் விஜய்.
அதனை தொடர்ந்து அவரது கட்சிக்கும் அவரது குரலுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க துவங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றுக்கும் நடிகர்களுக்கும் எப்போதுமே தொடர்பு என்பது இருந்து வருகிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விஜயகாந்த் என நிறைய பிரபலங்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.
மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்பதால் இவர்கள் அரசியலுக்கு வரும்போது நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் நடிகர் விஜய் மக்களை சந்திப்பதற்காக கோவை வந்தப்போது அவரை காண்பதற்கு மிகப்பெரிய கூட்டம் உண்டானது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் கூறும்போது அஜித் நினைத்தால் விஜய்யை விட பெரிய கூட்டத்தை கூட்ட முடியும். அந்த அளவிற்கு அஜித்திற்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அஜித் தன்னோட ரசிகர்களை சந்திச்சார்னா இப்ப விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஒன்னுமில்லாம போயிடும் என அவர் பேசியுள்ளார்.
