நாய் மாதிரி வேலைபார்த்து ஒரு ப்ரோயஜனமும் இல்லை.. மனம் நொந்த காஜல் பசுபதி..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் தனக்கென இடம் பிடித்தவர் நடிகை காஜல் பசுபதி. அதன் பின்னர் சின்னத்திரைக்குத் திரும்பி கஸ்தூரி, அரசி, இனியா போன்ற பிரபல சீரியல்களில் நடித்து வந்தார். அத்துடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், கோ, சிங்கம், டிஸ்யூம் போன்ற திரைப்படங்களிலும் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது வாய்ப்புகள் குறைந்த நிலையில், காஜல் பசுபதி இயக்குனர் அவதாரத்தில் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறும்படத்தை இயக்க உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

Social Media Bar

சமீபத்தில் ஒரு பேட்டியில், “பல சீரியல்களில் நடித்தும் எனக்கு சம்பளமே தரவில்லை. கடைசி ஒரு சீரியலில் சம்பளத்தை கேட்டதற்காக என்னை குடித்துவிட்டு சண்டை போட்டதாகப் பழிச்சு விட்டார்கள். இதனால் என் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது,” என கண்ணீர் வடிய உருக்கமாக கூறினார்.

மேலும், “இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்தேன். ஆனால் சம்பளத்திற்குப் பதிலாக பொய்யான பழி மட்டும்! தகராறு செய்ததாக சொல்றாங்க, அதுக்கான எந்த ஆதாரமும் இல்ல!” என அவர் கூறியுள்ளார்

தனது கஷ்ட அனுபவத்தையும், திரைத்துறையில் நேர்மையோடு இருக்க முயன்றதற்கான விலைதான் இவ்வாறு வீணானதா எனக் கேள்வி எழுப்புகிறார் காஜல் பசுபதி.