Movie Reviews
வைரஸ் பரவலை வச்சே பயம் காட்டிட்டாங்க!.. வரவேற்பை பெறும் காலாபானி வெப் தொடர்!..
இணையதளம் வந்த பிறகு தமிழ்நாட்டை தாண்டியும் பல விஷயங்களை ரசிகர்கள் பார்க்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில் காலாபாணி என்கிற தொடர் மக்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட எதிர்காலத்தில் நடப்பது போன்ற கதை அமைப்பை கொண்ட இந்த தொடர் மிகுந்த பரபரப்புடன் செல்வதால் பார்ப்போர் அனைவருக்கும் பிடித்த ஒரு தொடராக இருக்கிறது.
தொடரின் கதைப்படி அந்தமான் தீவுகளில் திடீரென்று ஒரு மர்ம நோய் பரவ துவங்குகிறது. இந்த நோயின்படி தலைக்கு பின்னால் கருப்பு நிறத்தில் வடுக்கள் உருவாகி பிறகு அவர்களுக்கு அதிகமான காய்ச்சல் ஏற்படுகிறது இந்த காய்ச்சல் சில நாட்களில் சரியாகிறது.
சரி உடல்நிலை சரியாகி விட்டது என்று அவர்கள் நம்பும் பொழுது தொடர்ந்து விக்கல் ஏற்படுகிறது நிற்காமல் வரும் இந்த விக்கல் ஒரு நிலையில் அவர்களை இறப்பிற்கு உள்ளாக்குகிறது. இந்த நோய்க்கு மருந்தே கிடையாது என்கிற நிலையில் ஒரு ஏரி தண்ணீரில் அந்த நோயின் வைரஸ் பரவுவதால் மொத்த அந்தமான் தீவுகள் முழுக்க அந்த நோய் பரவத் துவங்குகிறது.

இதற்கு இடையே இந்த நோய் குறித்து ஏற்கனவே அறிந்த அந்தமான் பழங்குடியின மக்களான ஒராக்காஸ் அந்தமானை விட்டு வேறு இடத்தில் சென்று தஞ்சம் புகுகின்றனர். ஆனால் ஒராக்காஸ் மக்களுக்கு மட்டும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படவே இல்லை.
ஒரக்காஸ் எப்படி தப்பித்தார்கள் என பார்க்கும் பொழுது அதற்கு காரணமாக ஒரு செடி இருக்கிறது. இந்த நோய் அந்தமானில் பல காலங்களுக்கு முன்பே வந்துள்ளது அப்பொழுதும் அதிலிருந்து ஒரக்காஸ் தப்பித்து இருக்கின்றனர் அதற்கு அந்த செடிதான் காரணமாக இருந்திருக்கிறது.
ஆனால் 30 வருடங்களுக்கு முன்பே அந்த செடி அழிந்துவிட்டது. இதற்கு நடுவே அந்தச் செடி குறித்த தேடலும் நோய் அறிகுறியை மக்கள் எப்படி தடுக்கிறார்கள் என்பதையும் பேசும் விதமாக காலாபாணி தொடர் உள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் பாபரப்பை ஏற்படுத்தும் இந்த தொடர் தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
