தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா.

இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதைகளம் செல்கிறது.

ஆரம்பத்தில் இந்த படம் எம்.ஜி.ஆரின் கதையாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட கலைஞர் கருணாநிதியின் கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது வந்த தகவலின் படி இந்த திரைப்படம் தியாகராஜ பாகவதரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

Social Media Bar

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் தியாகராஜ பாகவதரும் என் எஸ் கிருஷ்ணனும்தான். அவர்களுக்கு பிறகு தான் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோர் வந்தனர்.

எனவே இந்த கதைகளமானது அவர்களது காலகட்டத்தை கூறும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு இருந்த சினிமாவை இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை அந்த வகையில் இந்த திரைப்படம் தான் முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.