Connect with us

இது மக்களுக்கான போர்!.. சுதந்திர வீரர்களை கௌரவித்த ப்ரோமோ… ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர்!..

hip hop aadhi

News

இது மக்களுக்கான போர்!.. சுதந்திர வீரர்களை கௌரவித்த ப்ரோமோ… ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர்!..

Social Media Bar

சினிமாவில் சிலருக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையாது. தங்களின் திறமைகளை மற்றவர்கள் அறிவதன் மூலம் வாய்ப்புகள் தானாக தேடி வரும். இதற்கு உதாரணமாக விளங்கியவர் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஹிப்ஹாப் தமிழா.

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த இவர் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து வரும் கடைசி உலகப்போர் படத்தில் இருந்து சுதந்திர வீரர்களை கௌரவிக்கும் விதத்தில் ஒரு ப்ரோமோ ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிப்ஹாப் ஆதி

கடந்த 2011 இல் “கிளப்ல மப்புல” என்ற ஆல்பம் சாங் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்த ஆதி, அதன் பிறகு 2012ல் ஹிப்ஹாப் தமிழன் என்ற ஆல்பத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டார். மேலும் இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுவாகும். மேலும் இவர் சுதந்திரமான இசைக் கலைஞராக இருந்தாலும் கடந்த 2013 முதல் அவருக்கு திரைப்படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமானார். ஆதி அதற்கு முன்பாகவே பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

Hiphop Tamizha

சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்த ஆதி, இந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இசையமைத்து வரும் ஆதி இறுதியாக தனது PT படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனராக, நடிகராக, இசையமைப்பாளராக பிசியாக இருந்து வரும் ஆதி, தற்போது தானே இயக்கி நடித்து வரும் படம் கடைசி உலகப் போர், அந்த படத்தில் ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடைசி உலகப் போர்

இந்தத் திரைப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து அந்த திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். இந்த திரைப்படத்தில் நாசர், நட்டிராஜ், முனிஸ்காந்த், அனகா, அழகன் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் போன்ற பலரும் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியாகி அது சுதந்திர வீரர்களை கௌரவிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

To Top