ஏற்கனவே வந்த படத்தை எப்புடி பாக்குறது..! இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? காதலிக்க நேரமில்லை ட்ரைலர் அப்டேட்.!
மற்ற இசையமைப்பாளர்கள் போல் அல்லாமல் தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட்டை உருவாக்க கூடியவராக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இருந்து வருகிறார்.
மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் பாடலுக்காக பெரிதாக வரவேற்பை பெறுகின்றன என்றாலும் ஏ.ஆர் ரகுமான் படங்கள் அளவிற்கு அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை.
அப்படியாக ஏ.ஆர் ரகுமான் இசையால் பிரபலமடைந்த திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் இந்த திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் சிக்கல் என்னவென்றால் மீண்டும் முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் இதே மாதிரி முக்கோண காதல் கதைதான். ஆனால் அது வெற்றி பெறவில்லை. மேலும் இதுக்குறித்து ரசிகர்கள் கூறும்போது இது அப்படியே ஓ.கே கண்மணி திரைப்படம் போலவே உள்ளது.
அந்த படத்திலும் இப்படிதான் நித்யா மேனன் திருமணமே பிடிக்காமல் இருப்பார். பிறகு துல்கர் மீதான காதல் அவருக்கு திருமணம் மீது ஆசையை உருவாக்கும். அதே கதை அம்சத்தை கொண்டுதான் இந்த கதையும் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.