காஜலும் தனுஷும் ரகசியமாக செஞ்ச வேலை… ரொம்ப நெருக்கமா இருக்கே… கதை அப்படி போகுதா..

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் தனுஷ் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் போகப்போக ஒரு கமர்சியல் நடிகராக தனக்கென தனி இடத்தை அவர் தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும்.

Social Media Bar

ஆரம்பத்தில் தனுஷ் நடித்த திரைப்படங்கள் நல்ல கதைகளை கொண்டிருந்த போதிலும் தனுஷ் ஒல்லியான தேகத்துடன் இருந்ததால் கதாநாயகனாக அவரை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறுப்பட்ட கதைகள்:

ஆனால் போகப் போக அவரது நடிப்பு பலருக்கும் பிடிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்காமல் தொடர்ந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார் தனுஷ்.

ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருடன் பல நடிகைகளை சேர்த்து வைத்து கிசுகிசுக்களை பேசி வந்தனர். அந்த வகையில் அப்பொழுது காஜலுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமீபத்தில் மீண்டும் வைரலாக தொடங்கி இருக்கின்றன.

ஏதோ ஒரு திரைப்படத்திற்காக இருவரும் போட்டோ சூட் நடத்தியுள்ளனர் அந்த போட்டோ சூட்டில் காஜல் மற்றும் தனுஷ் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அப்பொழுது அவர்கள் இருவருக்கும் காதல் இருந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

எந்த படமா இருக்கும்:

இதற்கு நடுவே அது எந்த படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோவாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதிகபட்சம் அது யாரடி நீ மோகினி படத்திற்கான போட்டோ சூட் ஆகத்தான் இருக்கும். அதற்கு பிறகு கதாநாயகியை மாற்றி இருக்க வேண்டும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் அதற்குப் பிறகு மாரி திரைப்படத்தில் தனுஷிற்க்கு ஜோடியாக நடித்தார் காஜல்.