Latest News
சொன்னா கேளு மாப்ள அந்த சீட்ட போடாத… தயாரிப்பாளர் சொல்லியும் கேட்காமல் காட்சி வைத்து மொக்கையான விக்ரம் படம்!.
ஒரு சினிமாவில் படம் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் அனைவரும் முக்கியமானவர்கள்.
ஒரு படத்தின் கதையை கேட்கும் போது இந்த படம் வெற்றி பெறுமா? இந்த படத்தில் சில மாறுபாடுகள் செய்தால் இந்த படம் மக்களைச் சென்றடைவது சுலபமாக இருக்கும் என பல திட்டமிடங்களுக்கு பிறகு தான் ஒரு படம் முழுமையாக திரையரங்குகளுக்கு வெளி வருகிறது.
அந்த வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனரிடம் கூறியும் கேட்காமல் எடுத்த திரைப்படம் ஒன்று தோல்வியில் முடிந்ததை பற்றி பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கலைபுலி தாணு கூறி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கந்தசாமி திரைப்படம்
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தான் கந்தசாமி. இந்த படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பிரபு, வடிவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் சாதனை புரியவில்லை.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
சமீபத்திய பேட்டி ஒன்றில் கந்தசாமி படத்தின் தோல்வியை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கலைப்புலி தாணு அந்த படம் தோல்வி அடையவில்லை. ஆனாலும் படத்தின் நீளம் காரணமாக வசூல் சாதனை புரியவில்லை என அவர் கூறியிருந்தார்.
படம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள். இதைப்பற்றி நான் இயக்குனர் சசி கணேஷிடம் கூறினேன். ஆனால் இதனை அவர் கேட்கவில்லை. படத்தின் நீளத்தை வைத்து படம் வெற்றி பெறுமா இல்லையா என நாம் கூறிவிடலாம். எனவே தயாரிப்பாளரை தேடி நடிகர்கள் வருவார்கள். நடிகர்களை தேடி தயாரிப்பாளர்கள் வருவார்கள். ஆனால் உன்னை தேடி படம் வருவது கடினமாகிவிடும் என நான் அவரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை கடைசியில் நான் சொன்னது போலவே ஆகிவிட்டது என கலைப்புலி தாணு கூறி இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்