கலியுகத்தின் அழிவுக்காக காத்திருக்கேன்!.. ராஜமௌலிக்கு டஃப் கொடுக்கும் பிரபாஸின் கல்கி!. கதை இதுதான்!..
பாகுபலி திரைப்படம் மூலமாக தென்னிந்தியா மட்டுமில்லாது மொத்த இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ்.
இதனால் இவரது திரைப்படங்களின் பட்ஜெட்டும் அநியாயத்திற்கு அதிகமாகியுள்ளது. ஆனால் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சலார் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
படத்தின் கதை:
கலியுகத்தின் இறுதியில் விஷ்ணு பகவான் எடுக்கும் 10 ஆவது அவதாரம்தான் கல்கி என்பது புராணங்கள் கூறும் கதையாகும். அதை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது டீசரின் வழியாக தெரிகிறது.
அந்த கல்கி அவதாரமாகதான் பிரபாஸ் இருப்பார் என தெரிகிறது. ஏனெனில் கதையில் துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமனாக அமிதாப் பச்சன் வருகிறார். எனவே இந்த படம் மகாபாராத கதையோடு தொடர்புடைய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்கி அவதாரத்தின் வருகைக்காக அசுவத்தாமன் காத்துக்கொண்டிருக்க வேற்று கிரகத்தில் இருந்து வரும் பிரபாஸ் அந்த கல்கி அவதாரமாக வருகிறார் என பேச்சுக்கள் இருக்கின்றன.