Connect with us

எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் தர முடியாது!.. சிவகார்த்திகேயனுக்கும் கமல்ஹாசனுக்கும் பண பிரச்சனையாம்!.. இருக்குற பிரச்சனை போதாதா?

sivakarthikeyan kamalhaasan

News

எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் தர முடியாது!.. சிவகார்த்திகேயனுக்கும் கமல்ஹாசனுக்கும் பண பிரச்சனையாம்!.. இருக்குற பிரச்சனை போதாதா?

Social Media Bar

சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சிகள் பல செய்து ஒரு வழியாக பெரும் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதனாலே சிவகார்த்திகேயன் அவரது திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளை தவிர்த்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டங்களில் அவரது சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகள் இருந்தாலும் கூட போக போக தனது திரைப்படங்களை சிறுவர்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றை தவிர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்சமயம் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ள நிலையில் ஏற்கனவே இமான் குறித்த ஒரு சர்ச்சையில் சிவகார்த்திகேயன் சிக்கி உள்ளது பலருக்கும் தெரிந்த விஷயமே, இது அவரது சினிமா மார்க்கெட்டை பெரிதாக பாதிக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் காஷ்மீரில் 60 நாட்கள் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்புகள் நடக்க இருந்தன. ஆனால் தற்சமயம் அந்த படப்பிடிப்பு 90 நாட்கள் வரை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகும் நிலை இருப்பதால் கமல்ஹாசன் கோபத்தில் இருக்கிறாராம். சென்னைக்கு வந்து மீதி படபிடிப்பை எடுக்கும் பொழுது அதற்கு குறைந்த பட்ஜெட்டே ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர் குழுவில் இருந்து கூறப்பட்டுள்ளது. எனவே தற்சமயம் பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

Articles

parle g
madampatty rangaraj
To Top