சமீபத்தில்தான் கோடம்பாக்கம் இப்படி கெட்டு போனுச்சு!.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன்!..

Kamalhaasan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வந்தார் கமல்ஹாசன். ஆனால் அவர் தயாரிப்பில் உருவான பல படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை.

விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தப்போதுக்கூட கமல்ஹாசன் அதற்காக பெரிதாக சந்தோஷப்படவில்லை என திரைத்துறையினர் மத்தியில் பேச்சு இருந்தது. கமல்ஹாசன் நடித்த குணா, ஆளவந்தான், விருமாண்டி போன்ற திரைப்படங்களில் கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும்.

Kamal_haasan
Kamal_haasan
Social Media Bar

ஒருமுறை பேட்டியில் பேசிய கமல்ஹாசன் தமிழ் சினிமா எவ்வளவு மோசமாகி வருகிறது என்பது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது நாடகங்கள் என்பவை குறைந்த செலவில் எடுக்கப்படுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்த மாதிரியான நாடகங்களுக்கே முதலில் ரிகர்சல் பார்த்துவிட்டுதான் பிறகு நடிக்க செல்கிறார்கள்.

ஆனால் கோடி ரூபாய் போட்டு எடுக்கும் சினிமாவிற்கு முதலில் ரிகர்சல் பார்ப்பதில்லை. இது என்னை மிகவும் பாதித்த விஷயமாகும். முன்பெல்லாம் இந்த ரிகர்சல் பார்க்கும் முறை இருந்தது. இப்போதுதான் கோடம்பாக்கம் இப்படி கெட்டு போயுள்ளது என கூறுகிறார் கமல்.

மேலும் அவர் கூறும்போது மருதநாயகம் படத்திற்கு இதே போல ரிகர்சலில் நடிக்கும் பொறுமை கொண்ட நடிகர்களைதான் நான் தேர்வு செய்து வருகிறேன் என கூறியுள்ளார் கமல்ஹாசன்.