Connect with us

ஐயா நடிப்பு பத்தலங்கய்யா!.. சிவாஜியையே கடுப்பேத்திய கமல்ஹாசன்…

sivaji ganesan kamal

Cinema History

ஐயா நடிப்பு பத்தலங்கய்யா!.. சிவாஜியையே கடுப்பேத்திய கமல்ஹாசன்…

Social Media Bar

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே இலக்கணம் வகுத்தவர் என பலராலும் புகழப்படும் சிவாஜி கணேசன் தான் கமல்ஹாசனின் திரைப்பயணத்திற்கும் பெரிய வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பல விதமான கதாப்பாத்திரங்களில், கதையமைப்புகளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உலக நாயகன் முத்திரையை பதித்துக் கொண்டார்.

சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் படமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவர் மகன் படத்தின் போதே கமல்ஹாசனுக்கும், சிவாஜி கணேசனுக்கும் இடையே சிறிய நடிப்பு சண்டை நிகழ்ந்துள்ளது.

அப்போது சிவாஜி பழம் நடிகர் என்பதால் ஒரு காட்சியை அவரிடம் விவரித்து விட்டால் அதை அவரே புரிந்து உணர்ந்து சிறப்பாக நடித்து விடுவார். அதை தாண்டி யாரும் அவரிடம் அடிக்கடி ரீடேக் கேட்பதோ அல்லது இப்படி மாற்றி நடிக்கலாம் என்று பரிந்துரை செய்வதோ செய்ய மாட்டார்கள்.

தேவர் மகன் படத்தை இயக்கியவர் பரதன். அந்த படப்பிடிப்பில் ஒரு காட்சியில் சிவாஜியின் நடிப்பு கமல்ஹாசனுக்கு சரியாக வரவில்லை என தோன்றியுள்ளது. அதை பரதனிடம் தயக்கத்துடன் கூறிய கமல்ஹாசன் “சிவாஜி சாரிடம் சொல்லி மறுபடி வேறுமாதிரி செய்ய சொல்லலாமா?” என கேட்டுள்ளார்.

ஆனால் அப்போதெல்லாம் சிவாஜியிடம் கரெக்‌ஷன் சொல்லவே பலரும் தயங்குவதை போல பரதனும் தயங்கியுள்ளார். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிவாஜி “என்ன டேக் ஓகேதான?” என்று கேட்டுள்ளார். அதற்கு பரதனை முந்திக் கொண்டு கமல்ஹாசன் “ஓகே இல்லைங்கய்யா” என்று கூறியுள்ளார்.

பிறகு “இந்த காட்சியில் பெரியத்தேவர் கேரக்டர் வரணும் சார்.. ஆனா கேரக்டர் கொஞ்சம் சின்ன தேவரா இருக்கு” என நடிப்பு குறைவாக உள்ளதை ஜாடையாக சொல்லியுள்ளார் கமல்ஹாசன். அதற்கு சிவாஜி கணேசன் முறைத்துக் கொண்டே “பெரிய தேவர்தான.. வருவாரு.. வருவாரு” என சொல்லிவிட்டு மீண்டும் அந்த காட்சியை சரியாக நடித்து கொடுத்தாராம்.

கோபமாக பேசினாலும் திரைப்படம் என்று வரும்போது திட்டிக் கொண்டே கூட சில காட்சிகளை அழகாக கேட்டதை விட சிறப்பாக செய்து தருவார் சிவாஜி என கமல்ஹாசன் அவர் குறித்த நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

To Top