இயக்குனர் ஷங்கரின் கனவு படமாக இருந்து வரும் திரைப்படம்தான் வேள்பாரி எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி இரண்டு பாகங்களாக வெளிவந்து ஒரு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்று பிரபலமடைந்த நாவல்தான் வேள்பாரி.
பறம்பு மலையில் வாழும் வேள்பாரி என்கிற குல தலைவனின் கதையை கொண்டு இந்த நாவல் அமைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அதனை படித்த ஷங்கர் இதை எப்படியாவது திரைப்படமாக்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறார்.
ஆனால் சமீப காலமாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே அவர் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.
இதனால் அவருக்கு வேள்பாரி திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் வெளிநாட்டு தயாரிப்பாளர் ஒருவர் வேள்பாரி படத்தை தயாரிப்பது குறித்து இயக்குனர் ஷங்கரிடம் பேசி வருகிறாராம்.
மேலும் இந்த திரைப்படத்தில் வயதான இரண்டு கதாபாத்திரங்கள் வருகின்றன வேள்பாரி கூட்டத்தில் ஒரு முதுதலைவர் இருப்பார். அதே மாதிரி பாண்டியர்களின் பக்கம் இருந்து பேசக்கூடிய ஒரு வயதான கதாபாத்திரமும் இருக்கிறது.
இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் கமல் மற்றும் ரஜினிகாந்தை நடித்த வைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர் இது குறித்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.