ஒன்னுக்கு ரெண்டா விலை போட்டு வித்த சரண்.. கமல்ஹாசனுக்கே விபூதியா!..

தமிழில் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சரண். தமிழின் பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய திரைப்படங்களில் ஜெமினி, காதல் மன்னன் போன்ற பல திரைப்படங்கள் பிரபலமானவை.

ஹிந்தியில் சங்கர் தாதா என்று வந்த திரைப்படத்தை தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பு இயக்குனர் சரணுக்கு வந்தது. சரணும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விருந்தார்.

படத்திற்கு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என பெயரிடப்பட்டது. அந்த படத்திற்கு சம்பளம் பேசிய சரண் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக இந்த படத்தை இயக்குவதாக கூறினார். ஆனால் அந்த படத்தை வேறு ஓர் நிறுவனத்திற்கு விற்றார்.

இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். என்னை கேட்காமல் எப்படி தயாரிப்பு நிறுவனத்தை மாற்றுனீர்கள் என கேட்டார். அதற்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் நேரடியாக கமல்ஹாசனிடம் பேசி அவரை சமாதானம் செய்தது.