சவரம் பண்றதுக்கு ப்ளேடுக்கிட்ட ஆலோசனை கேப்பியா!.. பணம் குறித்து கமல் நச்சுன்னு சொன்ன பதில்
அதிகரித்து வரும் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக பணம் மட்டுமே முக்கியம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
உலகில் எந்த ஒரு விஷயத்தை விடவும் பணம் அதிகம் முக்கியம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் என்னுடைய இளம் வயதில் பணம் இல்லாமல் இருந்திருக்கிறேன்.
பணம் இல்லாமல் ஒரு ஆறு மாதம் முதல் ஏழு மாதம் வரையில் தாக்கு பிடித்திருக்கிறேன். ஆனால் நம்மிடம் மூச்சு இல்லாமல் 40 நொடிகள் கூட தாக்கு பிடிக்க முடியாது. தண்ணீர் இல்லாமல் ஆறு நாட்கள் வரை தாக்கப்பிடிக்கலாம். உணவு இல்லாமல் பத்து நாட்கள் வரை தாக்கு பிடிக்கலாம்.
இப்படி இருக்கும் பொழுது பணத்தை மட்டும் முக்கியம் என்று எப்படி கூற முடியும். பணம் என்பது ஒரு கருவி மட்டுமே, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் சவரம் செய்வதற்கு எப்படி சவரம் செய்யலாம் என்று ஒரு பிளேடிடம் போய் ஆலோசனை கேட்பீர்களா? அப்படித்தான் பணமும், பணம் என்பது நம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான கருவி மட்டுமே அது நமது தேவை கிடையாது என்று விளக்கம் அளித்திருந்தார் கமல்ஹாசன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்