பாவடை கட்டி பாட்டு எடுக்க பார்த்தா ஊரே கூடிடுச்சு!.. நடிகைக்கு நடந்த சங்கடம்..
திரையில் வெளியாகும் திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அதிகமான நடிகர்களை அறிமுகப்படுத்தும் திரைப்படங்களாக இருக்கும். அதனால் அந்த மாதிரியான திரைப்படங்கள் சற்று சிறப்பானவை என்று கூறலாம். சென்னை 28 திரைப்படமும் ஒரு வகையில் சிறப்பான திரைப்படம் தான்.
ஏனெனில் பல நடிகர்களை அந்த திரைப்படம் அறிமுகப்படுத்தியது அதேபோல ஒரு திரைப்படம்தான் 1984 இல் வெளியான பூவிலங்கு. பூவிலங்கு திரைப்படம் நிறைய நடிகர்களுக்கு முதல் படமாக இருந்தது. நடிகை குயிலிக்கும் அதுதான் முதல் படமாக இருந்தது.
குற்றாலத்தில் இருந்த ஒரு கிராமத்தில் அந்த படத்திற்க்கான பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது .ஆத்தாடி பாவாடை காத்தாட என்கிற பாடலுக்கான படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. நான்கு சுவருக்கு நடுவில் ஒரு கிணறு இருக்கும்.
அந்த கிணறு அருகில் கதாநாயகி பாவாடை கட்டிக்கொண்டு அந்த பாடலை பாடுவது போன்று காட்சி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்பொழுது அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் அந்த சுவற்றை சுற்றி நின்று கொண்டு நடிகை குயிலியை வேடிக்கை பார்க்க துவங்க விட்டனர்.
இதனால் ஒவ்வொரு முறை படப்பிடிப்பும் முடியும் பொழுதும் துணியை எடுத்து உடம்பை போர்த்திக் கொண்டு கவலையாக அமர்ந்திருந்தாரம் நடிகை குயிலி. இதை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பொதுவாகவே படப்பிடிப்புகளில் நடிகைகள் காட்சிகளுக்கு இப்படி ஆண்கள் கூடுவது என்பது அப்போது வழக்கமாகவே இருந்திருக்கிறது.
