இந்திய ராணுவத்திடம் இருந்து கமலுக்கு வந்த எச்சரிக்கை!. பப்ளிசிட்டிக்காக பண்ணுன வேலை தப்பா முடிஞ்சுட்டு!..

Kamalhaasan: அரசியலுக்கு சென்ற கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் திரும்பவும் ஒரு முக்கிய முன்னேற்றமாக விக்ரம் திரைப்படம் அமைந்தது. விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார்.

வெகுகாலங்களுக்கு பிறகு கமலஹாசன் தயாரித்து அவரே நடித்து நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் இருந்தது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளராக நிறைய திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டார் கமல்ஹாசன்.

அதனை தொடர்ந்து சிம்பு சிவகார்த்திகேயன் மாதிரியான பெரும் நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தையும் கமல்ஹாசன்தான் தயாரித்து வருகிறார்.

Sivakarthikeyan-in-Amaran
Sivakarthikeyan-in-Amaran
Social Media Bar

இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார் ராணுவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் உண்மை கதையை தழுவிய படம் என்று கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தில் இருந்த முகந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் தயாராகிறது என்று கூறப்படுகிறது.

இதன் டீசர் வெளியான பொழுது அது ராணுவத்தினரிடமுடைய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டீசரில் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தையில் பேசுவது போன்ற ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அது ராணுவத்தினருக்கு மனதை புண்படுத்தும் விதமாக இருந்ததால் அவர்கள் இது குறித்து கமலுக்கு தகவல் அனுப்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தில் கண்டிப்பாக அந்த காட்சியை நீக்கி விடுவோம் என்று கமல் வாக்குறுதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுவாகவே டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகும் பொழுது இந்த மாதிரியான கெட்ட வார்த்தைகள் இடம்பெறுவது வழக்கம்தான்.

பிறகு படத்தில் அவற்றை நீக்கிவிடுவார்கள் இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான் இப்படி இருக்கும் பொழுது உண்மையிலேயே இதற்காக இந்திய ராணுவத்திடமிருந்து கமலுக்கு செய்தி வந்ததா இல்லை படத்தின் விளம்பரத்திற்காக அப்படி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறதா என்று நெட்டிசன்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.