வரிசையாக படம் கமிட் ஆகும் கமல்..! –  மறுபடி ரஜினியோடு போட்டியா?

மறுபடி ரஜினி, கமல் போட்டி உருவாகுமோ? என தோன்றும் அளவில் சூடு பிடிக்கிறது கோலிவுட் சினிமா களம்

தற்சமயம் நடிகர் ரஜினிதான் தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திரம் என இருந்தாலும், ஒரு காலத்தில் அவருக்கு இணையான ஒரு நட்சத்திரமாக இருந்தவர் கமல். இப்போதும் கூட அவருக்கு எந்த வகையிலும் செல்வாக்கு குறையவில்லை என்பதை விக்ரம் திரைப்படம் நமக்கு காட்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழில் பிரபல இயக்குனர்களுடன் வரிசையாக கூட்டணி போடுகிறார் கமல் என பேச்சுக்கள் வந்துள்ளன.

ஏற்கனவே இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்திலும் ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார். தற்சமயம் இயக்குனர் ஹெச்.வினோத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் கமல்.

மேலும் இந்த மூன்று இயக்குனர்களுக்கும் ஏற்கனவே முன்பணம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகமும் வர இருக்கிறது. இப்படி வரிசையாக திரைப்படங்கள் வரும் பட்சத்தில் திரும்பவும் ரஜினி கமல் திரைப்போட்டி ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Refresh