Connect with us

அந்த குட்டிப்பொண்ணா இது.. டூ பீஸ் உடையில் வந்த கமல் பட நடிகை..!

ester kamal

News

அந்த குட்டிப்பொண்ணா இது.. டூ பீஸ் உடையில் வந்த கமல் பட நடிகை..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வந்து குழந்தையாக நடித்துவிட்டு திடீரென வளர்ந்து நடிகை ஆகியிருப்பார்கள் சில பெண்கள். நம்மளுக்கும் வயதாகிறது என்று மக்கள் நினைக்கும் தருணங்கள் இந்த சின்ன பெண்கள் எல்லாம் வளர்ந்து நடிகை ஆகும்பொழுது நடக்கும்.

உதாரணத்திற்கு தெய்வத்திருமகள் திரைப்படத்தில் சிறுமியாக நடித்த பெண் பிறகு வளர்ந்து ஒரு பேட்டியில் வந்து பேசியிருந்தபொழுது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நந்தினியின் இளமை கால கதாபாத்திரத்தில் அவர்தான் நடித்திருந்தார்.

கமல் பட நடிகை:

அதனை பார்த்த மக்கள் பலரும் இன்னும் சில நாட்களில் இவர் கதாநாயகியாக நடிப்பார் என்று பேச தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு காலம் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் கமலுடன் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை எஸ்தர் அணிலும் தற்சமயம் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். பாபநாசம் திரைப்படத்தில் கமலின் கடைசி மகளாக நடித்திருப்பார் இவர்.

அவரின் நடிப்பு அசாத்தியமாக இருந்தது என்று அப்பொழுது வெகுவாக பாராட்டப்பட்டார். பாபநாசம் திரைப்படத்தின் மூல திரைப்படமான திருசியம் திரைப்படத்திலும் இவர் தான் அந்த மகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கதாநாயகியாக முயற்சி:

இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்று தமிழிலும் இவரையே நடிக்க வைத்திருந்தனர். மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் வளர்ந்து விட்ட எஸ்தர் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். கதாநாயகி ஆக வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் முதல் வேலை கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதுதான்.

அப்படியாக 2 பீஸ் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது சமீப காலமாக அது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

To Top