Connect with us

கமல் பட நடிகையை காணவில்லை!.. தேடலில் இறங்கிய போலீஸ்… என்ன நடந்தது!.

kamalhaasan jayapratha

News

கமல் பட நடிகையை காணவில்லை!.. தேடலில் இறங்கிய போலீஸ்… என்ன நடந்தது!.

Social Media Bar

Kamalhaasan : இந்திய சினிமாவில் 1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜெயப்பிரதா. பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ள இவர் தமிழிலும் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, மன்மத லீலை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சொற்பமான அளவிலேயே இவர் நடித்திருந்ததால் தமிழில் இவருக்கு பெரிதாக ரசிகர்கள் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளில் மிகவும் வரவேற்பை பெற்ற நடிகையாக இவர் இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் சொற்பமான நடிகைகளே இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடித்துள்ளனர்.

jayaprada
jayaprada

அந்த வகையில் ஜெயபிரதாவும் கிட்டத்தட்ட 8 மொழிகளில் நடித்துள்ளார். சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து மற்ற பிரபலங்கள் செய்வது போல இவரும் அடுத்து அரசியலுக்கு சென்றார். அதன்படி உத்திர பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாடி என்னும் மாநில கட்சியில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து மக்களவை உறுப்பினராக இருந்து வந்தார்.

ஆனால் பிறகு பாஜக கட்சிக்கு சென்ற பிறகு தேர்தல் விதிமீறல் செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் இதற்காக நீதிமன்றத்தில் ஜெயப்பிரதாவை ஆஜராகுமாறு கூறினார்கள். ஆனால் அவர் ஆஜாராகவே இல்லை.

இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது. ஜனவரி பத்தாம் தேதிக்குள் அவரை பிடிக்க கூறியுள்ளதால் தலைமறைவாகியுள்ளார் ஜெயபிரதா. அவரை தற்போது போலீஸ் தேடி வருகின்றனர்.

To Top