Cinema History
என்னையா தண்ணியடிச்சிட்டு படுத்துட்டாரு.. கடுப்பான பாலச்சந்தர்.. கெத்து காட்டிய கண்ணதாசன்!..
தமிழ் சினிமா வரலாற்றில் எவ்வளவோ கவிஞர்கள் வந்துவிட்டனர். ஆனால் கவிஞர் கண்ணதாசன் போல மற்றொரு கவிஞரை சினிமா பார்த்ததில்லை. கவிதை அவருக்கு ஊற்று போல சுரந்துக்கொண்டே இருக்கும் என பலரும் கூறியதுண்டு.
அப்படியாக நடிகர் கமல் அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். கமல்ஹாசன் அப்போது அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த படத்திற்கு பாடல் வரிகளை கண்ணதாசன்தான் எழுத வேண்டி இருந்தது. வெகுநாட்கள் ஆகியும் அவர் படத்திற்கு பாடல் வரிகளே எழுதி தரவில்லை.
இதனால் கண்ணதாசனை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தார் பாலச்சந்தர். ஆனால் நேரில் வந்த கண்ணதாசன் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டார். இதனால் கடுப்பான பாலச்சந்தர் கமல்ஹாசனிடம் வந்து கண்ணதாசன் குறித்து சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் அதன் பிறகுதான் தெரிந்துள்ளது. கண்ணதாசன் மது அருந்துவதற்கு முன்பே 7 செட் கவிதைகளை எழுதி வைத்துவிட்டுதான் சென்றிருந்தார். அதை எடுத்து பார்த்த பாலச்சந்தருக்கு எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை. ஏனெனில் அனைத்தும் சிறப்பான கவிதைகளாக இருந்தன.
அரை தூக்கத்தில் இருந்த கண்ணதாசன் நடந்த நிகழ்வுகளை பார்த்து சிரித்து கொண்டிருந்திருக்கிறார்.
