Tamil Cinema News
ரஜினி பத்தி நீங்க அப்படி புரிஞ்சிக்கிட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது… கமல் ஓப்பன் டாக்..!
தமிழ் சினிமாவில் எம்.ஜிஆர் சிவாஜிக்கு பிறகு போட்டி நடிகர் என்று பலராலும் பார்க்கப்பட்டவர்கள் ரஜினிகாந்தும் கமலஹாசனும் தான். ஆனால் ரஜினிகாந்தும் கமலஹாசனும் இப்பொழுது வரை நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.
போட்டி நடிகர்களாக இருந்த காலகட்டத்திலும் இருவரும் நண்பர்களாக தான் இருந்தனர். இப்பொழுதும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பேட்டிகளில் பேசும் பொழுது தன்னுடைய போட்டி நடிகரை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும்.
சமீபத்தில் கமல்ஹாசன் கூட ஒரு பேட்டியில் ரஜினி குறித்து கூறும் பொழுது ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே அதனை பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது அது மிகப்பெரிய விஷயம் தானே என்று கேட்டிருந்தார்.
அப்பொழுது கமலிடம் பேசிய தொகுப்பாளர் உங்கள் அளவிற்கு ரஜினிகாந்த் எஃபோர்ட் போடவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கமல் நீங்கள் அப்படி புரிந்து கொண்டால் நான் ஒன்னும் பண்ண முடியாது என்று பதில் அளித்து இருந்தார்.
மேலும் அப்படி அவர் கூறும் பொழுது இந்த அளவிற்கு ரஜினி எஃபோர்ட் போட தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
