இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் – பிறந்தநாளை வைத்து ப்ரோமோஷன் செய்த கமல்! பதிலளித்த சங்கர்

கட்சி மற்றும் அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதால் நடிகர் கமல்ஹாசனால் நடிப்பு துறையில் சரியாக ஈடுபட முடியவில்லை.

இதனால் சினிமாவில் அவரது பங்களிப்பு மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தி விடும் படமாக அமைந்தது.

ஏற்கனவே படமாக்க திட்டமிடப்பட்டு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2.

கமல் நடிக்கும் படத்தில் ஒரு ஹை பட்ஜெட் படம் என்பதால் விக்ரமிற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மக்களிடையே பல்வேறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியன் 2 திரைப்படம்.

இந்நிலையில் இன்று இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதில் “‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  என கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஷங்கர் “நிச்சயமாக ‘இந்தியரே’.

என் பிறந்தநாளை

சிறந்த நாளாக்கியது

உங்கள் வாழ்த்து

மிக்க நன்றி” என கூறியிருந்தார். இந்தியன் திரைப்படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக இவர்கள் இப்படி பேசியிருப்பது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh