அனிருத் ம்யூசிக்கை கேட்டு ஆடிப்போன உலக நாயகன்! – நெகிழ்ந்து போட்ட ட்வீட்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “விக்ரம்”

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ள நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல” என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி, பாடியும் உள்ளார். கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்துள்ளது குறித்து அனிருத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அனிருத்தை பாராட்டி பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “நீ எவ்வளவு பெரிய பரம்பரையைச் சேர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் கொள்ளு தாத்தா முதல் நீங்கள் வரை, ஒரே குடும்பத்தில் எத்தனை திறமைகள் மற்றும் சாதனைகள். நீங்கள் உண்மையிலேயே உங்கள் குடும்பத் தரத்திற்கு ஏற்றவாறு வாழ்கிறீர்கள். என் இளம் நண்பரே உங்களுக்கு அதிக சக்தி” என்று பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh